தினகரன் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளைப் பறிக்க அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

டிசம்பர் 25

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளைப் பறிக்க இன்று நடந்த அதிமுக அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அதிமுகவின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, டி.டி.வி தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களை நீக்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தினகரன் பக்கம் உள்ள மாவட்ட செயலாளர்களான வெற்றிவேல், கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன், முத்தையா, ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோரின் கட்சி பதவிகள் பறிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கண்ட அனைவரும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூடிய அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவால் கட்சி பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள், அந்தப் பதவியில் அப்படியே தொடர்வார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...