ஆர்.கே. நகர் மக்களுக்கும், வாழ்த்து கூறியவர்களுக்கும் எம்எல்ஏ தினகரன் நன்றி

டிசம்பர் 25

தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கும், தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கும் டிடிவி தினகரன் நன்றி தெரிவித்தார். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருக்கு எம்எல்ஏக்கள் பலர் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.  நேற்று தினகரன் வீட்டுக்குச் சென்ற வேலூர் எம்.பி. செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனுக்கு நடிகர் விஷால், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,  கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கும் எம்எல்ஏ டிடிவி தினகரன் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் எனக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெற வைத்த எனது அன்புக்குரிய ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கும், எனது வெற்றிக்காக இரவு பகல் பாராது அயராது பாடுபட்ட பாசமிகு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், தோழமைகளுக்கும் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...