நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை மும்பையில் இன்று தொடக்கம்

டிசம்பர் 25

இந்தியாவில் முதன் முறையாக ஏசி வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் புறநகர் ரயில் சேவை மும்பையில் இன்று தொடங்கப்பட்டது.

சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் இருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு சாதாரண மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தடங்களில் ஏசி ரயில்களையும் இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதன் முதற்கட்டமாக ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்கள் மும்பையின் சர்ச்கேட் - பொரிவ்லி இடையே இன்று அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி மற்றும் தானியங்கி கதவுகள் கொண்ட 12 பெட்டிகளுடன் இந்தப் புறநகர் ரயில் இயக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சென்னை, கொல்கத்தா, செகந்திராபாத் போன்ற நகரங்களுக்கும் இந்த ‘ஏசி’ வசதி கொண்ட புறநகர் ரெயில்களை விரைவில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ‘ஏசி’ ரயில்கள் இயக்கப்பட்டாலும், பழைய ரயில்களும் வழக்கம் போல இயக்கப்படும் என்று தெரிவித்துள்ள ரயில்வே துறை, இரண்டுக்குமான டிக்கெட் விலையில் மாற்றம் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

மும்பையில் இன்று தொடங்கப்பட்டுள்ள ‘ஏசி’ வசதி கொண்ட புறநகர் ரெயில்கள் சென்னையில் இயங்கி வரும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...