மீண்டும் சிறை செல்கிறார் லாலுபிரசாத்: கால்நடைத் தீவனம் ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிப்பு

டிசம்பர் 23

கால்நடை தீவனம் ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ், குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் சிறை செல்கிறார்.

ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 1977-ம் ஆண்டு முதல் தனது 29 வயதில் எம்.பி.யாகி நாடாளுமன்றத்துக்குச் சென்றார். இதன்மூலம் முதலாவது இளம் எம்.பி. எனப் புகழ் பெற்றார். 1990-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானார். அவருக்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது. இந்த ஊழல் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியிலும் தொடர்ந்தது.

அவர் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக மீண்டும் முதலமைச்சரான பின்பு கால்நடை தீவன ஊழலை அவருக்கு எதிராக பூதாகரமாக எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது. இதையடுத்து, பாட்னா உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த 1991 முதல் 94 காலகட்டத்தில் , மாட்டுத் தீவன ஊழல் தொடர்புடைய செலவிற்காக, பீகாரின் தியோகர் மாவட்ட கருவூலத்தில் இருந்து, 84.5 கோடி ரூபாய் பணம் எடுத்து மோசடி செய்தது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சராக்கினார்.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணை பீகாரில் இருந்து தனியாக பிரிந்து சென்ற ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்காக லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சென்று நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட மொத்தம் 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 11 பேர் இறந்து விட்டதால், மீதம் உள்ளவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

லாலு பிரசாத் உடனடியாக நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அவர் அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சிறை தண்டனை அனுபவித்த இரண்டரை மாதங்களில் லாலு பிரசாத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் விடுதலையானார்.

லாலு பிரசாத் யாதவ் மீதான அரசு கருவூல பணம் ரூ. 30 கோடி ஊழல் வழக்கு விசாரணை ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி சிவபால் சிங் முன்னிலையில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் நேற்றே ராஞ்சிக்கு வந்து விட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் மகனும் பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவும் வந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என ராஞ்சி சி.பி.ஐ.,சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அவருடன் சேர்த்து மொத்தம் 15 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, லாலுபிரசாத் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறை செல்கிறார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...