ராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 32 பேர் பலி

டிசம்பர் 23

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

சவாய் மாதோபூர் மாவட்டம் துபி பகுதியில் உள்ள பனாஸ் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. 

ஆற்றில் இருந்து இதுவரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...