முதலமைச்சரின் சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை மாற்றம் செய்த விவகாரம் : ஒருவர் கைது

டிசம்பர் 23

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சட்டைப்பையில் வைத்திருந்த ஜெயலலிதா படத்தை மாற்றி, பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பதைப் போல சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயல் பாதிப்புகளை பார்வையிட சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அதிகாரிகள் வரவேற்றனர். இது தொடர்பான படங்கள் ‘வாட்ஸ்–அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன.

பிரதமரை வரவேற்றபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சட்டைப்பையில் முன்னாள் முதலமைச்சரின் ஜெயலலிதா உருவப்படத்தை வைத்திருந்தார். அந்தப் படத்தை வெளியில் இருந்து பார்த்தாலும் ஜெயலலிதா உருவம் தெரிந்தது.

இந்த நிலையில், அந்தப் படத்தில் ஜெயலலிதா உருவத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக பிரதமர் மோடியின் படத்தை இடம்பெறச்செய்து சமூக வலைத்தளங்களில் வி‌ஷமத்தனமாக வெளியிடப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரான கனகராஜ் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டி என்பவரைக் கைது செய்தனர். அலெக்ஸ்பாண்டி, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...