ரூ. 2,000 நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டம் கிடையாது : மத்திய அரசு

டிசம்பர் 22 

2,000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டம் கிடையாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. மாறாக, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டது. இதனையடுத்தே, இரண்டாயிரம் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியது. மத்திய அரசு திரும்பப்பெற இருப்பதாகத் தகவல் வெளியாகின. ஆனால், அதனை மத்திய அரசு நிராகரித்தது. 

இந்நிலையில், புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுவதையும், புதியதாக அச்சடிப்பதையும் ஆர்பிஐ நிறுத்தலாம் என பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் கூறப்பட்டது. 

இதனையடுத்து, மத்திய அரசு புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்ப பெறுகிறது எனத் தகவல்கள் பரவியது. அதனை மத்திய அரசு மறுத்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், “யூகங்கள் உருவாகி வருகிறது. இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் தவறானவை. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் எதுவும் அரசு தரப்பில் அறிவிக்கப்படாத வரையில் இதனை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். என்றார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...