ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் முன் இருதய நிபுணர் தினேஷ் ஆஜர்

டிசம்பர் 22

ஜெயலலிதாவுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இருதய சிகிச்சை மருத்துவர் தினேஷ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு நியமித்தது. இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை மருத்துவர் தினேஷ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

ஜெயலலிதாவுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி இதய செயலிழப்பு ஏற்பட்டது. அப்போது, மருத்துவர் தினேஷ் சிகிச்சை அளித்தார். அதன் அடிப்படையில் அவர் இன்று ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? நீங்கள் சிகிச்சை அளித்தபோது அவருக்கு உயிர் இருந்ததா? உடல்நிலை தேறி வந்தவர் திடீரென பின்னடைவு ஏற்படக்காரணம் என்ன? என்பது பற்றி மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...