மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு


டிசம்பர் 21

மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் கவிஞர் யூமா வாசுகிக்கு 2017-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில், இலக்கியத்திற்கான சிறந்த கவுரவமாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள 24 மொழிகளிலும் சிறந்த படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருதும் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான விருது அறிவிப்பு இன்று தில்லியில் சாகித்ய அகாடமியில் நடந்தது. மறைந்த எழுத்தாளர் இன்குலாப்பின், காந்தள்நாட்கள் என்ற கவிதை தொகுதிக்கும் விருது வழங்கப்படுகிறது. கசாக்கின் இதிகாசம் என்ற மலையாள நூல் மொழிப்பெயர்ப்புக்காக யூமாவாசுகிக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இன்குலாப்பின் இயற்பெயர் செ.கா.சீ. சாகுல் அமீது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையிலும், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பு, தொடர்ந்து மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை (தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தொடக்கக் காலத்தில் திமுக ஆதரவாளராக பொதுப்பணியாற்றியவர், கீழ்வெண்மணி சம்பவத்திற்கு பிறகு மார்க்சிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 

இன்குலாப் கவிதைகள் என்ற தலைப்பில் கவிதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 12 கவிதை தொகுதிகளும், ஒரு சிறுகதை தொகுப்பு, இரண்டு கட்டுரை தொகுப்புகள், 6 நாடக தொகுப்புகளும் ஒரு மொழிபெயர்ப்பு நுாலும் படைத்துள்ளார். 2017-ல் இவரது அனைத்து கவிதைகளையும் உள்ளடக்கிய ‛ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்' என்ற தொகுதி வெளியானது. 

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதியன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2016ல் இவர் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாக இருந்தார். ஆனால், கடைசிநேரத்தில் வண்ணதாசன் பெயர் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு இன்குலாப்பிற்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் காலமான ஒருவருக்கு விருது வழங்கலாமா என சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், கண்ணதாசன் போன்றோருக்கு அவர்களது மறைவுக்கு பிறகு சாகித்யஅகாடமி வழங்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...