ஜெயலலிதா உடலை டி.என்.ஏ சோதனை செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது? : நீதிபதி கேள்வி

டிசம்பர் 21

ஜெயலலிதா மகள் என உரிமைகோரி அம்ருதா தாக்கல் செய்த வழக்கில், ஜெயலலிதா உடலை டி.என்.ஏ பரிசோதனை செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவின் மகள் என்று தம்மை உரிமை கொண்டாடி வரும் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் வாரிசு என்பதை உறுதி செய்வதற்காக தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். ஆனால், அவரது மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் உயர்நீதிமன்றத்தில் முறையிடவும் அறிவுறுத்தியது. 

இதனையடுத்து, ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடக்கோரி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

உண்மையான வாரிசு என்று ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் டி.என்.ஏ சோதனைக்கு அனுமதிக்கலாம் என்றும், விளம்பரத்திற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், டி.என்.ஏ சோதனைக்கு அனுமதித்தால் நிறையப் பேர் இதுபோல வழக்கு தாக்கல் செய்யத் தொடங்கிவிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

அப்போது, இது தங்களது சொந்த விவகாரம் என்றும், விளம்பரம் தேட முயற்சிக்கவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனிடையே, நீதிபதி வைத்தியநாதன், “ ஜெயலலிதா உடலை டி.என்.ஏ சோதனை செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது வாரிசு உரிமை கோராமல், தற்போது இறந்த பின்னர் கோருவது ஏன்? என்றும், தற்போது எதன் அடிப்படையில் டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிட முடியும் என்று மனுதாரரை நோக்கி நீதிபதி கேள்வி கேட்டார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...