ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து செய்தியாளரை சந்திக்கும் டி.டி.வி.தினகரன்

சென்னை, டிசம்பர் 21

ஆர்.கே நகரில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 5 மணிக்கு மேல் ஜெயலலிதா வீடியோ குறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 8 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 

இதனிடையே, ஆர்.கே நகர் தொகுதியில் வாக்குப்பதிவைப் பார்வையிட்ட டி.டி.வி. தினகரன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்குச்சாவடிகளில் தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் தேர்தல் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மின்சாதனங்களில் கோளாறு ஏற்படுவது வழக்கம் தான் என்றார்.

மேலும், தேர்தலை ரத்து செய்ய பலரும் திட்டமிட்டு செயல்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் மிகப்பெரும் சவாலாக தேர்தலை நடத்தி வருகிறது. எங்களது அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, வாக்குப்பதிவு முடிந்ததும் மறக்காமல் ஐந்து மணியளவில் பிரின்ஸ் லாட்ஜுக்கு வந்துவிடுங்கள். அந்த வீடியோ குறித்து முழுமையான விவரங்களை சொல்கிறேன் என்றார் தினகரன்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...