2ஜி வழக்கு: தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ராசா, கனிமொழி ஆஜர்

டிசம்பர் 21

2ஜி வழக்கில் இன்னும் சில மணி நேரங்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் ஆஜராகியுள்ள நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தில்லி, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக-வைச் சேர்ந்த ஆ. ராசா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கை தெரிவித்தது.

இது தொடர்பாக, சிபிஐ இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் பதிந்தன. கடந்த, 10 ஆண்டுகளாக இந்த வழக்குகளை விசாரித்த தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி இன்று தீர்ப்பு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, ராஜ்யசபா எம்பி கனிமொழி உள்ளிட்டோர் தற்போது தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 

இந்நிலையில் நீதிமன்ற வளாகம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வீடுகளில் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...