உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி

டிசம்பர் 20

உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்த தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

பொது இடங்களில் கட் அவுட், பேனர் வைக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த தடை உத்தரவுக்கு எதிராக மாநகராட்சி சார்பில் வழக்கறிஞர் செல்வசேகரன் மேல் முறையீடு செய்தார். 

இந்த வழக்கை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்நிலையில், இம்மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும், ஆபாச படங்கள் மட்டுமே பேனர், கட் அவுட்களில் இருக்க கூடாது என்று விதிமுறைகள் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...