காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு

டிசம்பர் 20

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ள 4 பேரின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காஷ்மீரின் வடக்கு எல்லைப் பகுதியின் அருகில் மூன்று ராணுவ வீரர்கள் கடந்த டிசம்பர் 13ம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அங்குப் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், அங்கு இருந்த 3 வீரர்களும் சிக்கினர். இதனிடையே, அன்றைய தினமே குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் சிக்கினர்.

இதனைத்தொடர்ந்து, பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களில் ஒருவர் என். மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் 36-வது ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சேர்ந்தவர் ஆவார்.

 à®°à®¾à®£à¯à®µ வீரர் மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது குறித்த தகவலை அவரது குடும்பத்தினரிடம் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...