ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரம்: அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்து


டிசம்பர் 20

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். 

அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்து பின்வருமாறு:

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், à®œà¯†à®¯à®²à®²à®¿à®¤à®¾ மரணமடைந்தவுடன் வீடியோவை வெளியிடாதது ஏன்? ஆர்கே நகர் தேர்தலுக்காக உள்நோக்கத்துடன் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். என்றார். 

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், ஜெயலலிதாவை சசிகலா ஏதோ செய்துவிட்டார் என அரசியல் செய்தவர்கள் இதனை வரவேற்க வேண்டும். வீடியோ வெளியிடப்படும் எனக் கடந்த மே 3-ம் தேதி கூறியிருந்தேன். எனக் கூறினார்.

தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியப்படுத்தவே வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வீடியோ வெளியிட்டதற்கும் தேர்தலுக்கும் எந்தத் தொடர்புமில்லை. இவ்வாறு பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ போயஸ் கார்டனில் எடுக்கப்பட்டதா அல்லது அப்பல்லோவில் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது. தேர்தலுக்காக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நாளை நடக்க உள்ள தேர்தலில் இந்த வீடியோ தாக்கத்தை ஏற்படுத்தும். என்றார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன் பேசுகையில், உள்நோக்கம் உடையது. அரசியல் ஆதாயத்திற்காக வெளியிடப்பட்டதாகக் கருதுகிறேன். தேர்தலில் பாதிப்பு ஏற்பட வேண்டும். தனக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. எனக் கூறினார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், இத்தனை நாட்களாக இருந்துவிட்டு நாளைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் வீடியோவை வெளியிட்டது ஏன்..?. முன்கூட்டியே வெளியிட்டிருந்தால் பல விமர்சனங்களைத் தவிர்த்திருக்கலாம். இவ்வாறு பேசினார். 

பாஜக தேசிய செயலர் எச்.ராஜா பேசுகையில், இந்த வீடியோ உண்மையானதாக இருந்தால் ஆறுமுகசாமி ஆணையத்திடம் கொடுத்திருக்க முடியும். மோசமான உடல்நிலையில் அனுமதிக்கப்பட்டதாக, மருத்துவமனை தெரிவித்த நிலையில், தற்போது வெளியான வீடியோவை நம்ப முடியவில்லை. எனக் கூறினார்.

அமைச்சர் சண்முகம் கூறுகையில், ஜெயலலிதா இல்லை என்பதால் வீடியோவை சசிகலா தான் எடுத்தார் எனக் கூறுவதா? தேர்தலைக் கருத்தில் கொண்டு ஒராண்டுக்குபின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பேசிய வீடியோ இருந்தால் வெளியிட வேண்டியது தானே? ஆதாரம் இருக்கும் பட்சத்தில் விசாரணை ஆணையத்தில் கொடுக்காதது ஏன்? ஆதாரத்தை இதுவரை தராதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். என்றார். 

ஓபிஎஸ் ஆதரவாளர் கே.சி. பழனிசாமி கூறுகையில், ஜெயலலிதாவுக்கு பிப்.,7-ம் தேதி முதல் வெளியிடாதவர்கள் இப்போது வெளியிட்டது ஏன்?

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ காட்சிகள் வீடியோ கிராபிக்ஸ் என அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் கூறியுள்ளார். என்றார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...