அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டிசம்பர் 20

அந்தமான் அருகே வரும் 25-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தரப்பில் கூறப்படுவதாவது:- 'தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துவிட்டது. இந்நிலையில், வரும் 25-ம் தேதி காலகட்டத்தில் தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உருவாக வாய்ப்புள்ளது. மேலும், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:- சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும்படியாக எங்கும் மழை பதிவாகவில்லை. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் கடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1,000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...