ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி - தமிழகத்திற்கு ரூ.4047 கோடி நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் கோரிக்கை

டிசம்பர் 19

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளைச் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 

ஒகி புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி, இன்று பகல் 2:20 மணியளவில் கன்னியாகுமரி வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் குமரி வந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். 

பின்னர், அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், விவசாயிகள் மற்றும் மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். 

முன்னதாக, பிரதமர் மோடி ஒகி புயலால் பாதிக்கப்பட்ட லட்சத்தீவுகளை ஆய்வு செய்தார். அங்கு ஆய்வு முடிந்த பின், விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, ஒகி புயல் சேத அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணமாக ரூ. 4,047 கோடி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...