குமரி உள்பட ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் மோடி நாளை ஆய்வு

டிசம்பர் 18

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கேரளா, லட்சத்தீவு மற்றும் குமரி மாவட்டப் பகுதிகளை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) பார்வையிடுகிறார்.

அரபிக்கடலில் உருவான ஒகி புயல் கடந்த 30–ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாகத் தாக்கியது. இதில், குமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகியது. கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமாகி உள்ளனர். இந்தப் பிராந்தியங்களை உருக்குலைத்த ஒகி புயல், பின்னர் லட்சத்தீவிலும் தனது கொடூர முகத்தைக் காட்டியது. அங்கும் பல பகுதிகள் புயலுக்கு இரையாகி உள்ளன. அங்கும் கடற்கரை பகுதிகள் சின்னாபின்னமாகி விட்டன.

தமிழகம் மற்றும் கேரளாவைப் புரட்டிப் போட்ட ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், புயல் தாக்கிய பகுதிகளைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் மற்றும் கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...