குஜராத்தில் 6-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக: இமாச்சலப்பிரேதசத்திலும் தாமரை மலருகிறது

டிசம்பர் 18

குஜராத், இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னிலைப் பெற்றுள்ள பாஜக, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கிறது.

குஜராத் மாநில சட்ட சபைக்கு கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தின் 33 மாவட்டங்களில் 37 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் குஜராத்தில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறி இருந்தன. ஆனால், அந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் அப்படியே நிஜமாகவில்லை.

தொடக்கத்தில் பாஜக முன்னிலை பெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்ற போது, ஒருகட்டத்தில் பின் தங்கி இருந்த காங்கிரஸ் கட்சி மளமளவென அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த காங்கிரசாருக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் புத்துணர்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர். பட்டாசுகளை வெடிக்கத் 

தொடங்கினார்கள்.

பாஜக - காங்கிரஸ் இரு கட்சிகளும் சமமான நிலைக்கு வந்தன. நிமிடத்துக்கு நிமிடம் இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்றன. இதனால், குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போவது பாரதீய ஜனதா கட்சியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என்பதில் இழுபறி ஏற்பட்டது. பின்னர், பாரதீய ஜனதா கட்சி சுமார் 10 இடங்கள் காங்கிரசை விட கூடுதலாக பெற்று முன்னிலை பெற்றது. அதாவது, மொத்தம் உள்ள 182 இடங்களில் பாஜக 93 இடங்களில் முன்னிலைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 86 இடங்களில் வெற்றி வாய்ப்புடன் இருந்தது. இதன் காரணமாக, குஜராத் தேர்தல் முடிவுகளில் கடும் விறுவிறுப்பு காணப்பட்டது.

அப்போது பாரதீய ஜனதா கட்சி 105 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 74 இடங்களில் முன்னிலையில் உள்ளது. குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 இடங்கள் வேண்டும். இந்த இலக்கை பாரதீய ஜனதா கட்சி கடும் போராட்டத்துக்குப் பிறகு எட்டிப்பிடித்தது. இதன் மூலம், பாரதீய ஜனதா கட்சி குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

குஜராத்தில் இதுவரையிலான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி 49 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 41.6 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி (இரட்டை விரலை) வெற்றிக்கான சின்னத்தை காண்பித்து கையசைத்து சென்றார். குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மேற்கு ராஜ்கோட் தொகுதியில் முதலில் பின்தங்கி, தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று உள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. 1990-ம் ஆண்டு ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சி 27 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

1995-ம் ஆண்டு முதல் பாஜக குஜராத்தின் தன்னிகரற்ற தனிப்பெரும்பான்மை பலம் மிக்க கட்சியாக திகழ்ந்து வருகிறது. 1995, 1998, 2002, 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ச்சியாக பாஜக 5 முறை வென்று ஆட்சி அமைத்திருந்தது. தற்போது பாஜக குஜராத்தில் 6-வது முறையாக தொடர்ச்சியான வெற்றியை ருசித்துள்ளது. இந்த முறை பாஜகவுக்கு கிடைத்த இடங்கள் சற்று குறைந்தாலும் ஆட்சி அதிகார மகுடத்தை அது இழக்கவில்லை. குஜராத் என்றால் பாஜக என்ற நிலையை பா.ஜ.க. மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேபோல, 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேசத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத், இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் பாஜக-வே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பின் வந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இருமாநிலத் தேர்தல் முடிவுகளும் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாசல பிரதேசத்தில் பாரதீய ஜனதா கூட்டணிகள் 44 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதனால், பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைவுடனே இன்றைய பங்குச்சந்தை ஆரம்பித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 663.83 புள்ளிகள் குறைந்து 32,799 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 201.35 புள்ளிகள் குறைந்து 10,131 புள்ளிகளில் வர்த்தகமாவதாகக் கூறப்படுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...