குஜராத் சட்டசபை தேர்தலில் ஆறு வாக்குச்சாவடிகளிலும் இன்று மறு வாக்குப்பதிவு

டிசம்பர் 17

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குகள் நாளை (டிசம்பர் 18) எண்ணப்படவுள்ள நிலையில், ஆறு வாக்குச்சாவடிகளில் மட்டும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் குஜராத்தை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் உள்ள பாஜக-விற்கும், குஜராத்தில் எப்படியாவது ஆட்சியினை அமைக்க வேண்டும் என்ற காங்கிரஸும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே, தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட இருந்த நிலையில் ஆறு வாக்குச்சாவடிகளில் மட்டும் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்தத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவிட்டது.

இதுகுறித்து குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.பி சுவான் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட சிறு தொழிற்நுட்பக் கோளாறுகளால் வட்காம், விராம்கம் தொகுதியில் தலா இரண்டு வாக்குச்சாவடிகளிலும், தஷ்க்ரோய் மற்றும் சவிலி தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடக்கும் என்று அறிவித்து இருந்தார்.

மேலும், நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையில் விசாக் நகர், மொடாசா உள்ளிட்ட ஏழு தொகுதிகளில் உள்ள பத்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்காளர் ஒப்புகைச்சீட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

இதையடுத்து இன்று குறிப்பிட்ட ஆறு வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...