இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் பலி-ராஜஸ்தான் எஸ்பி தகவல்

டிசம்பர், 17

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற இடத்தில் கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரனின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில்தான் பெரியபாண்டியன் மரணமடைந்ததாக ராஜஸ்தான் எஸ்பி தீபக் பார்கவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் கடந்த மாதம் ஒரு நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த மூன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டனர். இதுதொடர்பாக 4 பேரைக் கைது செய்த போலீஸார், முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி உள்ளிட்டோரைத் தேடி ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திற்குச் சென்றனர்.

அங்கு நாதுராம் உள்ளிட்ட கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது பெரியபாண்டியனின் துப்பாக்கியைப் பறித்த நாதுராம் போலீஸாரை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பெரியபாண்டியன் உயிரிழந்துவிட்டார். மேலும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் காயமடைந்தார்.

இந்நிலையில் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் ராஜஸ்தான் மாநிலத்தில் கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். இதனிடையே தினேஷ் சவுத்ரியை மட்டும் கைது செய்துவிட்டு இன்று தமிழகம் விரைந்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தின் காவல்துறை எஸ்பி தீபக் பார்கவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், à®•ொள்ளையன் நாதுராமை பிடிக்கும் முயற்சியின் போது பெரியபாண்டியன் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, பெரியபாண்டியன், முனிசேகர் துப்பாக்கிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துதான் அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாதுராமை நோக்கி முனிசேகர் சுட்டபோது குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என்று அதிர்ச்சி அளிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் எஸ்பி தீபக்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...