ராஜஸ்தானில் இருந்து சென்னை திரும்பியது தமிழக போலீஸ்


டிசம்பர் 16

கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையிலான தனிப்படை சென்னை திரும்பியது.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரைக் கைது செய்வதற்காகச் சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர், போலீஸ்காரர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி, சுதர்சன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 8–ந் தேதி ராஜஸ்தான் சென்றனர்.

அங்கு பாலி மாவட்டம், ராமாவாஸ் என்ற கிராமத்தில் குற்றவாளிகள் நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் பதுங்கி இருப்பதாகச் சென்னை தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவர்களைச் சுற்றிவளைத்து பிடிக்கச் சென்றபோது, சென்னை தனிப்படை போலீசார் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்நிலையில், கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்ற இணை ஆணையர் சந்தோஷ் குமார் தலைமையிலான தனிப்படை சென்னை திரும்பி உள்ளது. கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த காவல் ஆய்வாளர் முனிசேகரும் சென்னை திரும்பினார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...