காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல் காந்தி

டிசம்பர் 16

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

சோனியா காந்தி சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் அவரால் நேரடியாகப் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. மூத்த நிர்வாகிகளை வீட்டுக்கு அழைத்து கட்சி தொடர்பாக ஆலோசனை வழங்கி வந்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவராக 11–ந் தேதி ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

இதையடுத்து, ராகுல் காந்தி பதவியேற்கும் நிகழ்ச்சி டெல்லி அக்பர் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. விழா மேடையில், ராகுல் காந்தி, 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அமர்ந்து இருந்தனர். அப்போது, ராகுல் காந்தியிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராகவும், நேரு குடும்பத்தில் இருந்து 6-வது காங்கிரஸ் தலைவராகவும் ராகுல் காந்தி தேர்வாகியுள்ளார்.  

இந்த விழாவில், நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தனது சகோதரர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்வதைக் காண பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் வந்திருந்தனர். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டதும், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...