அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவேன் : சோனியா காந்தி அறிவிப்பு

டிசம்பர் 15

அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும், விரைவில் ஓய்வு பெறுவேன் என நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

132 ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்பும், பாரம்பரியமும் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தற்போது சோனியா தலைவராக உள்ளார். காங்கிரஸ் வரலாற்றில் அதிக ஆண்டுகள் அதாவது சுமார் 17 ஆண்டுகள் அவர் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகச் சோனியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதன்பிறகு தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.

வீட்டில் இருந்தபடியே கட்சி மூத்த தலைவர்களை அழைத்துப் பேசி, ஆலோசனை நடத்தி காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுத்து வந்தார். மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்த போது கூட அவர் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. இந்த நிலையில் 2019-ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரசைத் தயார்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் சோனியாவிடம் நிர்ப்பந்தமான ஒன்றாக மாறியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி கடந்த 11-ந்தேதி போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் நாளை (சனிக்கிழமை) காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த நிலையில், சோனியா நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று கூறப்பட்டது. மேலும் காங்கிரசில் ‘‘காப்பாளர்’’ என்ற புதிய பதவி சோனியாவுக்காக உருவாக்கப்படும் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால், சோனியா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் மனநிலையில் இருப்பது இன்று தெரிய வந்தது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:- ஓய்வு மட்டும்தான் இனி என் வேலை. நான் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது. விரைவில் ஓய்வு பெறுவேன்.  இவ்வாறு சோனியா கூறினார்.

நாளை ராகுல் காந்தி தலைவராக பதவி ஏற்றதும் முழுப் பொறுப்பையும் அவரிடம் சோனியா ஒப்படைத்து விட்டு ஒதுங்கி விடுவார் என்று கூறப்படுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...