ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசின் உத்தரவை ஏற்றது உச்சநீதிமன்றம்

டிசம்பர் 15

அரசின் நலத்திட்டங்களைப் பெறவும், மொபைல், பான், வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளித்த மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஆதாரைக் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

அப்போது, அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஏற்றுக் கொண்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மக்களை மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது. மக்கள் விருப்பத்தின் பேரிலேயே மொபைல், பான், வங்கிகணக்கு, அரசின் நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். ஆதார் எண் இல்லாமல் மக்கள் வங்கி கணக்கு துவக்க அனுமதிக்கலாம். அதேநேரத்தில், ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...