எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

டிசம்பர் 14

எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 1,851 எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இந்த வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதற்குப் பதிலளித்த மத்திய அரசு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம் எனக் கூறியிருந்தது. 

இந்த நிலையில், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் உள்ள தமிழகம், ஆந்திரா, பீகார், கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு நீதிமன்றங்கள் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை மட்டுமே விசாரித்து ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மாநில அரசுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கிப் பணியை தொடர வேண்டும் எனவும், மார்ச் 1-ம் தேதி முதல் இந்த சிறப்பு நீதிமன்றங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...