தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு

டிசம்பர் 14

இந்திய வங்கிகள் கேட்டுக் கொண்டதின் பேரில், இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத் தொழில் அதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார். அதில், ரூ.9 ஆயிரம் கோடியை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விட்டு இங்கிலாந்துக்கு தப்பி ஒடிவிட்டார். தற்போது, இங்கிலாந்திலேயே வசித்து வரும் அவருக்கு, அங்கும் ஏராளமான நிறுவனங்களும், சொத்துக்களும் உள்ளன. அதை கவனித்து கொண்டு சொகுசு வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று சிபிஐ தரப்பில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, தனியார் சட்ட நிறுவனம் மூலம் விஜய் மல்லையாவால் ஏமாற்றப்பட்ட 12 வங்கிகள் சார்பில் லண்டனில் உள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி வைத்து தங்களுக்கு உரிய தொகையை பெற்று தரும்படி கேட்டு இருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே நடந்து வந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது, விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விஜய் மல்லையாவின் செலவுக்கு வாரம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் அளவுக்கு வழங்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்திய வங்கிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவருடைய சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு இருப்பதால் இந்திய வங்கிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. இங்கிலாந்தில் விஜய் மல்லையா, ஆரஞ்சு இந்தியா கோல்டிங்ஸ், யுனைடெட் மது நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். அவருக்கு இங்கிலாந்தின் விர்ஜின் தீவுகளிலும் சொத்துக்கள் உள்ளன. இவற்றின் பெரும் பகுதி முடக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...