ஆர்.கே. நகர் தேர்தல் வாக்குப்பதிவை கண்காணிப்பு கேமராவில் படம் பிடிக்க வேண்டும்: திமுக மனு

டிசம்பர் 14

ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் வாக்குப்பதிவை கண்காணிப்புக் கேமராவில் படம் பிடிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்குக் கடந்த மே மாதம் இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை வாரி இரைத்தார். இதையடுத்து இந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில் வருகிற 21-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலிலும் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

அதேபோல ஆளும் கட்சி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு மீண்டும் பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்து மோசடியில் ஈடுபடுவார்கள். மேலும், தேர்தலின்போது, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி, கள்ள ஓட்டுப் போட திட்டமிட்டுள்ளனர். எனவே, ஆர்.கே.நகர் முழுவதும், அனைத்துத் தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும்.

வாக்குப்பதிவு நடக்கும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவேண்டும். வாக்குப்பதிவு முழுவதையும் படம் பிடிக்கவேண்டும். இதன்மூலம் முறைகேட்டை எளிதாகத் தவிர்க்கலாம். அதேநேரம், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றும் செயலும் முறியடிக்கப்படும். எனவே, ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும், குறிப்பாக வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தப்பட்டால், தேர்தல் முறைகேடு நடப்பதைத் தவிர்க்கலாம். வாக்குப்பதிவை கேமரா மூலம் பதிவு செய்து நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும். என அவர் கூறியிருந்தார்.

மேலும், ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் கலவரத்தில் ஈடுபடலாம். இதனால், சட்டஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், போலீஸ் பாதுகாப்பு அதிகம் போடவேண்டும். தற்போது, 10 கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் தேர்தல் பணிக்கு வந்துள்ளனர். இது போதாது. கூடுதலாகத் துணை ராணுவத்தினரை வரவழைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மருது கணேஷ் மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மருதுகணேஷ் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளுங்கட்சியினர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவார்கள் என்பதால், தேர்தலின்போது வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். தேர்தல் நெருங்கி வருவதால், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் சிவஞானம், ரவிச்சந்திரபாபு ஆகியோர், இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...