ராஜஸ்தானில் வீரமரணம் அடைந்த போலீஸ்காரரின் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி

டிசம்பர் 14

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடலுக்கு, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர்.



ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது காவல்துறையினரிடம் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெரியபாண்டியனின் உடல் தமிழகம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, இன்று காவல் ஆய்வாளர் உடல் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து விமானத்தில் புறப்பட்டது. மதியம் 12.20 மணிக்கு அவரது உடல் சென்னை வந்து சேர்ந்தது.

விமான நிலையத்தில் பெரியபாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்கள் சாரங்கன், ஜெயராம், சே‌ஷசாயி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலியின் போது, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கையில் கருப்புப்பட்டை அணிந்திருந்தனர். 

இதற்காகச் சென்னை விமான நிலையத்தில் 5-வது வாசல் அருகில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீரவணக்கம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அருகில் 21 துப்பாக்கிகளைக் கையில் ஏந்தியபடி 21 போலீசார் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். 

சென்னையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் மதுரைக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சாலைப்புதூருக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது பூர்வீக வீட்டில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்பிறகு அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா மற்றும் 2 மகன்கள் நேற்றிரவே சாலைப்புதூர் கிராமத்திற்குச் சென்று விட்டனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...