ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிப்பு

கேரளா, டிசம்பர் 14

கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகேயுள்ள பெரும்பாவூர் பகுதியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான ஜிஷா கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அவரது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜிஷா வீட்டின் அருகேயுள்ள ஹாலோ பிளாக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிவந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமிருல் இஸ்லாம் என்பவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த அமிருல் இஸ்லாமைக் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.

இதனைத்தொடர்ந்து, அமிருல் இஸ்லாம் தான் கொலை செய்தார் என்பது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவரைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், அவருக்கான தண்டனை விபரத்தினை இன்று (டிசம்பர் 14) எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்தது. அதில், குற்றவாளியான அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...