திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பெண் பலி

டிசம்பர் 14

திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்த விபத்தில் பெண் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 10.45 மணியளவில் கோவிலின் பிரகார மண்டபம் இடிந்து விழுந்தது. இதில் எதிர்பாராத விதமாக பெண் பக்தர் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், ஒரு பக்தர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...