இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி - முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, டிசம்பர் 13

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிசாமி ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி உதவி அறிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்காக ராஜஸ்தானுக்குச் சென்ற போது ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு இன்ஸ்பெக்டர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரியபாண்டியின் மரணச் செய்தி தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி தரவேண்டும் எனவும், படுகாயம் அடைந்த ஆய்வாளர் முனிசேகருக்கு அரசு செலவில் உரிய உயர் சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனிடையே, பெரியபாண்டியின் மரணம் குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் அளிக்கப்படும். அவரது இரண்டு மகன்களின் படிப்புச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் முனிசேகர், தலைமைக் காவலர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் மற்றும் மருத்துவச் செலவை தமிழக அரசு முழுமையாக ஏற்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...