ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசிடம் ஆளுநர் கோரிக்கை

டிசம்பர் 12

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோரிக்கை விடுத்துள்ளார். 

டெல்லி சென்ற அவர் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியுள்ளார். குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டோர் நிலை குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும், புயல் நிவாரண நிதி தருமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் தமிழக ஆளுநர் கோரிக்கை வைத்துள்ளார். அதன் பிறகு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்துப் பேசிய அவர், தென்னிந்திய நதிகளை இணைத்து தமிழகத்துக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தார். பின்னர், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் திரிபுரா ஆளுநர்களுடன் இணைந்து தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்துப் பேசினார். 

முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டெல்லிக்குச் சென்று மத்திய அரசிடம் ஆளுநர் ஓகி புயலுக்கு நிவாரணமாக நிதி கோரியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...