அடுத்தாண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள் : சி.பி.எஸ்.இ அறிவிப்பு

டிசம்பர் 12

2018-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. 

மருத்துவ படிப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் இந்தி கேள்வி தாள்கள் எளிதாகவும், தமிழில் வழங்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும், மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு குறித்த விசாரணையில் பதிலளித்துள்ள மத்திய பள்ளி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), அடுத்தாண்டு முதல் எந்த குளறுபடியும் இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று எழுத்துப்பூர்வ அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தி மற்றும் ஆங்கில வழியிலேயே அதிகமானார் எழுதுவதாகவும், பிராந்திய மொழிகளில் குறைவான பேர் எழுதுவதால் இந்தக் கோளாறு நேர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் கொண்டு வரப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...