இந்த ஆண்டுக்கான அன்னை தெரசா விருதைப் பெற்றார் நடிகை பிரியங்கா சோப்ரா

டிசம்பர் 12

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சமூக நீதிக்காக இந்த ஆண்டுக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது.

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் போரினால் சீரழிந்துள்ள சிரியா நாட்டுக்குச் சென்றார். அங்கு அகதிகளாக உள்ள குழந்தைகளை சந்தித்து அவர்களிடம் உரையாடினார். இதுபோன்ற சமூக விஷயங்களில் ஆதரவு தரும் வகையில், செயல்பட்டதற்காக அவருக்கு இந்த அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது.

பல்வேறு பொதுநல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர் என அறியப்படும் பிரியங்கா சோப்ரா, யூனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இந்த விருதினை அவருக்குப் பதிலாக அவரது தாயார் மது சோப்ரா பெற்று கொண்டார். 

இதுபற்றி அவரது தாயார் கூறுகையில், பிரியங்காவுக்கு பதிலாக இந்த விருதினை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதிக இரக்கம் மற்றும் கருணை தன்மை கொண்டுள்ள ஒரு குழந்தையை பெற்றதற்காக நான் நிறைந்த பெருமை கொள்கிறேன்.நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்களோ அந்த அளவிற்குப் பெறுவீர்கள் என்ற உண்மைக்கு எடுத்துக்காட்டாக அவள் இருக்கிறாள். அவள் ஒரு குழந்தையாக இருந்தபொழுதும், அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்டு இருக்கிறாள். அவள் பரேலியில் உள்ள பிரேம் நிவாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறாள். எனக் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் கிரண்பேடி, அன்னா ஹசாரே, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுதா மூர்த்தி, மலாலா யூசப்சை, சுஷ்மிதா சென் மற்றும் பில்கீஸ் பனோ எதி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...