ஜெயலலிதாவுக்கு அதிக ”ஸ்டீராய்டு” கொடுத்ததால் உடல்நலம் பாதிப்பு: மருத்துவரின் வாக்குமூலத்தால் பரபரப்பு

டிசம்பர் 12

அப்பல்லோவில் அனுமதிக்கும் முன்பு ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக விசாரணை ஆணையத்திடம் அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, அதுபற்றி உண்மை கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் ஜெயலலிதாவுடன் தொடர்பு உடையவர்களையும், அவருக்குச் சிகிச்சை அளித்தவர்களையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விவரங்களைத் தெரிவிக்கலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி அறிவித்திருந்தார். அதன்படி, அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதும், முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு ஸ்டீராய்டு மருந்து தரப்பட்டுள்ளது. அந்த ஸ்டீராய்டு மருந்து சற்று அதிக அளவில் கொடுக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாகத்தான் ஜெயலலிதாவின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு மருத்துவர் சங்கர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...