ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டிசம்பர் 12

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக் காரணமாக அவர் சென்னை புழல் சிறைக்கு விரைவில் மாற்றப்பட இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், “வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கிக் கொடுத்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய சூழலில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதே நேரத்தில், வெடிகுண்டு தொடர்பான சி.பி.ஐ. சிறப்பு குழுவின் விசாரணை அறிக்கையைப் பேரறிவாளன் தரப்பிடம் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...