மோசடி வழக்கு: முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு

டிசம்பர் 12

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறிப் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அருள்மொழி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிடோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘இதே குற்றச்சாட்டுகளுடன் கணேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஏற்கனவே ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மற்றொரு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். அரசியல் உள்நோக்கத்துடனும், பழிவாங்கும் நோக்கத்துடனும் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...