இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட விராட்கோலி - அனுஷ்கா : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

டிசம்பர் 12

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் இத்தாலியில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். டெலிவி‌ஷன் விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் முதல்முறையாக இருவரும் சந்தித்தபோது காதல் ஏற்பட்டது. முதலில், மறைமுகமாக இருந்த இந்தக் காதல் பின்னர் வெளிப்படையாக இருந்தது. 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் ஓய்வு கேட்டு இருந்தார். இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெறும் என்று யூகங்கள் வெளியானது. ஆனால் எந்தத் தேதியில் திருமணம் என்பது தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில், விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று நடந்தது. இந்து முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்தத் தகவலை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் டுவிட்டரில் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இருவரும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் “நாங்கள் இருவரும் என்றென்றும் அன்புடன் இருப்போம் என உறுதி எடுத்துள்ளோம். இந்த அழகான நாள் எங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகளின் வாழ்த்துக்களால், மேலும் சிறப்பானதாக அமைந்துள்ளது. எங்களது வாழ்க்கை பயணத்தில் முக்கிய அங்கமாகத் திகழும் ரசிகர்களுக்கு நன்றி” என்று தெரிவித்திருந்தனர்.

விராட் கோலி - அனுஷ்காவிற்கு பிரபலங்கள் டுவிட்டர் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், அனில்கபூர், ஷாகித்கபூர், அபிஷேக்பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், ஸ்ரீதேவி, பிரியங்கா சோப்ரா, பிரினிதி சோப்ரா, நேகா துபியா உள்ளிட்ட இந்தி நடிகர்- நடிகைகள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளளர்.

கோலி- அனுஷ்கா திருமண வரவேற்பு இரண்டு இடங்களில் நடக்கிறது. வருகிற 21-ந்தேதி டெல்லியிலும், 26-ந்தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு மற்றும் விருந்து நிகழ்ச்சிகள் நடக்கிறது.

டெல்லியில் நடைபெறும் திருமண வரவேற்பில் குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். மும்பையில் நடைபெறும் திருமண வரவேற்பில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்கிறார்கள்.

டெல்லியில் திருமண வரவேற்பு முடிந்ததும் புதுமண ஜோடி மும்பையில் உள்ள வொர்லி பகுதியில் குடியேறுகிறது. விராட் கோலி மனைவி அனுஷ்காவுடன் தென் ஆப்பிரிக்காவில் புத்தாண்டை கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க தொடரில் அவர் மனைவியையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் ஜனவரி 5-ந்தேதி தொடங்குகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...