ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் போட்டியிடத் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு

டிசம்பர் 12

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் ஒருவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தன் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில், ஒருவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. 

அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டாலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு தொகுதியின் எம்பி அல்லது எம்எல்ஏவாக மட்டுமே இருக்க முடியும். அதனால், மற்றொரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அந்தத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்துவதால், அரசுக்கு அதிக செலவாகிறது. அதனால், ஒருவர், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் படி சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். அல்லது, ராஜினாமா செய்யும் தொகுதிக்கு இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.

எம்எல்ஏ தொகுதிக்கு, ஐந்து லட்சம் ரூபாயும், எம்பி தொகுதிக்கு, ரூ.10 லட்சமும் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளோம். மத்திய அரசுக்கு, 2004 மற்றும் 2016ல் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளோம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மத்தியஅரசு தான் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...