கடலில் இறங்கும் விமானத்தில் முதன்முறையாக பிரதமர் மோடி பயணம்



டிசம்பர் 12

குஜராத் மாநிலம் ஆமதாபாத் சாலைப் பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி நிலத்திலும், கடலிலும் இறங்கும் விமானத்தில் பிரதமர் மோடி முதன்முறையாகப் பயணம் செய்ய உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, அனைத்து இடங்களிலும் விமான நிலையங்கள் கட்ட முடியாது. இதனால், மத்திய அரசு நீர்வழிப்பாதைகளில் கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக சபர்மதி ஆற்றில் கடலில் இறங்கும் விமானம் தரையிறங்க உள்ளது. அந்த விமானத்தில் தரோய் அணை பகுதியிலிருந்து அம்பாஜி கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்ப உள்ளேன்.

ஆமதாபாத்தில் சாலை வழி பேரணிக்கு கட்சி திட்டமிட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. இதனையடுத்து, அம்பாஜி கோயிலுக்கு கடலில் இறங்கும் விமானத்தில் செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கூறுகையில், இந்தியாவின் வரலாற்றில் கடலில் இறங்கும் விமானம் சபர்மதி ஆற்றில் தரையிறங்க உள்ளது. இந்த விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்து அம்பாஜி கோயிலுக்கு சென்று திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...