கோவை - மத்தியபிரதேசம் இடையிலான வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் ஜன.,6 முதல் இயக்கம்


டிசம்பர் 11

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும்  (எண் : 02198) மத்தியபிரதேசம் (ஜாபல்பூர்) - கோவை இடையிலான வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் வரும் ஜனவரி 6-ம் தேதியிலிருந்து  இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் மார்ச் 31 வரையிலான சனிக்கிழமைகளில் ஜாபல்பூரில் காலை 11 மணிக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல, (எண் : 02197) கோவை - மத்தியபிரதேசம் இடையிலான வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் வரும் ஜனவரி 8-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரையிலான திங்கட்கிழமைகளில் மாலை 7.05 மணிக்கு இயக்கப்படுகிறது. 

ஜனவரி 6 - மார்ச் 31 வரை (சனிக்கிழமைகளில்) ரயில் எண் - 02198 : ஜபால்பூர் (மத்தியபிரதேசம்) - கோவை வாராந்திர அதிவேக ரயில்

ஜனவரி 8 - ஏப்ரல் 2 வரை ( திங்கட்கிழமைகளில்) ரயில் எண் - 02197 கோவை - ஜபால்பூர் (மத்தியபிரதேசம்) - கோவை வாராந்திர அதிவேக ரயில் 

இதில், 5 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 10 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 4 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் 

என மொத்தம் 19 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயிலானது, நரசிங்பூர், கதர்வாரா, பிப்பரியா, இட்டர்சி, ஹர்தா, கந்த்வா, புஷாவல், மன்மத், இகத்பூரி, பன்வேல், ரோஹா, கேட், சிப்லுன், ரத்னிகிரி, கன்கவளி, கூடல், திவிம், மட்கோன், கர்வார், குமதா, மூகாம்பிகா சாலை பைந்தூர், உடுப்பி, முல்கி, மங்களூரு ரயில்நிலையம், கஷராஹோடு, கன்ஹாங்கட், பயனூர், கன்னூர், தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூர், சொர்ணூர் மற்றும் பல்ஹாட் ரயில்நிலையங்களில் நிறுத்தப்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...