கட்அவுட், பேனர் கலாச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு

டிசம்பர் 11

உயிருடன் இருப்பவர்களுக்காக கட்அவுட், பேனர்களை வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

கட்அவுட், பேனர்களில் உயிருடன் இருப்பவர்களின் படங்களை பயன்படுத்தச் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை, இன்று (டிச.,11) விசாரித்த நீதிபதிகள், உயிருடன் இருப்பவர்களின் படங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்தனர். மேலும், கட்அவுட், பேனர் வைக்க அனுமதிக்கும் நடைமுறையை மறுஆய்வு செய்யும் நேரம் வந்து விட்டதாகவும், வருவாய் நோக்கத்திற்காக மட்டுமே பேனர், கட்அவுட்கள் வைக்க அனுமதிக்கப்படுகிறதா என அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 

தொடர்ந்து, கேரளாவில் தேர்தல் நேரங்களில் மூங்கில் தட்டிகளில் மட்டுமே பேனர் வைக்கப்படுவதாகவும், பேனர், கட்அவுட் வைப்பதால் மக்கள் அவதிப்படுவதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை என நீதிபதிகள் கேட்டுள்ளனர். பின்னர், தலைமை நீதிபதி விசாரணைக்காக இவ்வழக்கு வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...