காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் ராகுல்காந்தி



டிசம்பர் 11 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியின் மகனும், கட்சியின் துணைத் தலைவருமான ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ம் தேதி கடைசி நாள் என கூறப்பட்டிருந்தது. கடைசி நாளான டிசம்பர் 4-ம் தேதியன்று ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் டிசம்பர் 11 -ம் தேதி எனவும் கூறப்பட்டிருந்தது. தலைவர் பதவிக்கு ராகுலை தவிர வேறும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 

இந்த நிலையில், ராகுலை தவிர வேறும் யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி முள்ளிப்பள்ளி ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ராகுலுடன் சேர்த்து மொத்தம் 89 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் செல்லத்தக்கவை. இவை, அனைத்தும் ராகுலை கட்சியின் தலைவராக முன்மொழிந்தே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனால், ராகுல் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.

கடந்த 17 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவராக சோனியா இருந்து வந்தார். தற்போது, ஒருமனதாக ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் டிசம்பர் 16-ம் தேதி கட்சியின் 87-வது தலைவராக பதவியேற்க உள்ளார். நேரு குடும்பத்தில் இருந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் 6-வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ளனர். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...