காவல்துறை நியாயமாக நடந்து கொள்ளவிட்டால், நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை - தினகரன் மிரட்டல்

டிசம்பர் 11

தமிழக காவல்துறை நியாயமாக நடந்துகொள்ள வேண்டும், இல்லையெனில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தனது ஆதரவாளர்களைக் காரணமின்றி கைது செய்வது குறித்து புகார் அளித்தேன். ஆர்.கே.நகரில் எனது ஆதரவாளர்களைக் காரணமின்றி போலீஸார் கைது செய்கின்றனர். தீவிரவாதிகளைப் பிடிப்பது போலக் கைது செய்கின்றனர். நக்சலைட் போல நள்ளிரவில் கைது செய்வதா? போலீஸார் நேர்மையாகச் செயல்படவில்லை. இதற்கெல்லாம் பயப்படுகிற ஆட்கள் நாங்கள் இல்லை.

உண்மையாகவே தேர்தல் சரியாக நடக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். விரக்தியின் உச்சியில் ஆளுங்கட்சி உள்ளது. குமரியைத் தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகளை அரசு முடுக்கிவிடவும் இல்லை, முடிக்கவும் இல்லை.

தமிழக காவல்துறை நியாயமாக நடந்துகொள்ள வேண்டும், இல்லையெனில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன். அடுத்தகட்ட தலைவரை ஆர்.கே.நகர் தொகுதிமக்கள் உருவாக்க இருக்கிறார்கள். ஆர்.கே நகர் தேர்தலில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...