அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரமா..? : நடிகர் கவுண்டமணி மறுப்பு

டிசம்பர் 11

ஆர்.கே.நகரில் அதிமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக வெளியான செய்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்குகிறார். அவருக்கு ஆதரவாக நடிகர் செந்தில் வாக்குசேகரிப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவாக, நடிகர் கவுண்டமணி பிரச்சாரம் மேற்கொள்வார் எனச் செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை நடிகர் கவுண்டமணி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், இன்று ஒரு காலை நாளிதழில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி உண்மையல்ல. நான் எந்தக் கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன். நான் எந்தக் கட்சியையும் ஆதரித்து பிரச்சாரம் செய்யவில்லை. என்னைக் கேட்காமல் அவதூறாகச் செய்தி வெளியிட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...