பாண்டவர் அணியில் திடீர் விரிசல்: நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா

டிசம்பர் 11

நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியைத் திடீரென பொன்வண்ணன் ராஜினாமா செய்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளில் நடக்கும் மாற்றங்களைவிட நடிகர் சங்கத்தில் நடக்கும் மாற்றங்கள் சற்று அதிகம். நாள்தோறும் பரபரப்பான ஏதாவது ஒரு விஷயங்கள் நடிகர் சங்கத்தில் நடந்துவருகிறது. அந்த வகையில், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், ஆர்.கே.நகர் தேர்தலில் மனுத்தாக்கல் செய்யப்போவதாகத் தகவல்கள் வந்ததிலிருந்து சினிமா உலகைச் சேர்ந்த சிலர் விஷாலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வந்தனர். 

இதனிடையே, நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் நிறுத்தப்பட்டது. கூட்டத்தைப் பாதியில் நிறுத்தியதைக் கண்டித்து நடிகர் சேரன், டி.ராஜேந்தர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் தங்கள் எதிர்ப்பைக் கோபமாகப் பத்திரிகையாளர் முன்னிலையில் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான நடிகர் பொன்வண்ணன், சங்கப் பொறுப்பில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். விஷாலின் பாண்டவர் அணியிலிருந்த பொன்வண்ணன் திடீரெனப் பொறுப்பிலிருந்து விலகியிருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...