செய்தியாளரைத் தாக்கிய வழக்கில் விஜயகாந்திற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

டிசம்பர் 5

2012-ம் ஆண்டு செய்தியாளரை தாக்கிய வழக்கில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் நடிகர்விஜயகாந்திற்கு எதிராக ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

கடந்த நவம்பர் 2012ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. எம்எல்ஏக்கள் மா.ஃபா. பாண்டியராஜன் உள்ளிட்ட சிலர், ஜெயலலிதாவைச் சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, செய்தியாளர் ஒருவரை விஜயகாந்த் வசைபாடித் தீர்த்துவிட்டார். மேலும், அவரது சகாக்கள் செய்தியாளரைக் கீழே பிடித்துத் தள்ளினர். இது தொடர்பாக சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் விஜயகாந்த் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். இதனால், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது விஜயகாந்திற்கு எதிராக  பிடிவாரண்ட் பிறப்பித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...