வேட்பு மனு நிராகரிப்பு : ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்

டிசம்பர் 5

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஷால் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் விஷால் திடீரென போட்டியிடுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, வேட்பு மனுத் தாக்கலின் கடைசி நாளில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

இந்நிலையில், நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் நபரை அந்தத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும். ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாகக் காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விஷாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என திமுக மற்றும் அதிமுக தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சுமார் இரண்டரை மணி நேரம் அவரது மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டப் பின்னர்,  இன்று மாலை வேட்பு மனு நிராகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியானதால் பெரும் பரபரப்பு உருவானது.

இதைதொடர்ந்து, ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலகத்துக்கு விரைந்து சென்ற  நடிகர் விஷால் தன்னை ஆதரித்து முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வாக்குவாதம் செய்தார். இதை அவர் ஏற்க மறுத்து விட்டதாகத் தெரிகிறது.

பின்னர், தேர்தல் அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் தண்டையார் பேட்டைச் சாலையில் அமர்ந்து நடிகர் விஷால் திடீர் மறியலில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்து  விரைந்து வந்த போலீசார் விஷாலிடம் சமரசம் பேசி, அவரைத் தேர்தல் அலுவகத்துக்குள் அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...