காங்கிரஸ் தேசிய தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாகத் தேர்வு

டிசம்பர் 5 

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ராகுல்காந்தி போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வாகியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள சோனியா காந்தியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என அக்கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதற்கேற்ப, அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் ராகுலை தலைவராக நியமிக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த மாதம் கூடிய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ராகுல்காந்தி டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் தனது வேட்புமனுவை நேற்று காலை தாக்கல் செய்தார். மூத்த தலைவர்கள் கமல்நாத், ஷீலா தீக்‌ஷித், மோதிலால் வோரா, தருண் கோகோ ஆகியோர் அவரை முன்மொழிந்தனர். அதற்கு முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இல்லங்களுக்குச் சென்று அவர்களிடம் ஆசி பெற்றார்.

ராகுல் காந்தி நேரில் வந்து தாக்கல் செய்த வேட்பு மனு தவிர, அவரது பெயரால் மேலும் பலர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்களை இன்று பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்து தாக்கல் செய்ப்பட்ட 89 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டதாக இன்று மாலை அறிவித்துள்ளார்.

இதையடுத்து, காங்கிரஸ் தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரே வேட்பாளரான ராகுல் காந்தி போட்டி இன்றி ஒருமனதாகத் தேர்வாகியுள்ளார். à®…வர் விரைவில் சோனியாவிடம் இருந்து தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனத் தெரிகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...